search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ஜிகல் ஸ்டிரைக்"

    • சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றார் திக்விஜய் சிங்.
    • சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக அதே ஆண்டின் செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது என மத்திய அரசு தெரிவித்தது.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் அவருடன் இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்றனர். அப்போது பேசிய திக்விஜய் சிங், காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிகல் தாக்குதல் நடத்தினோம் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பா.ஜ.க. அரசு அடுக்கடுக்கான பொய்களை மட்டுமே கூறி ஆட்சி செய்து வருகிறது என கூறினார்.

    சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அவர் சான்று கேட்பது இந்திய வீரர்களை அவமதிக்கும் மற்றும் கொச்சைப்படுத்தும் விவகாரம் ஆகும் என பா.ஜ.க. எதிர்ப்பு குரல் எழுப்பியது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட பார்வைகளை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. அவரது கருத்துகள் ஒதுக்கப்பட வேண்டியவை. ராணுவ வீரர்கள் தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர் என்பதில் நாங்கள் முழு அளவில் தெளிவாக இருக்கிறோம். அதற்கு வீரர்கள் சான்றளிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.

    இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #UGC #SurgicalStrikeDay
    புதுடெல்லி:

    2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம்,  அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், வரும் 29-ம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

    இந்த சுற்றறிக்கை சர்ச்சையை உண்டாக்கியது. நாட்டின் ராணுவத்தின் செயல்பாட்டை அரசியலாக்கும் நடவடிக்கை இது என விமர்சனங்கள் எழுந்தன. தன்னாட்சி அமைப்பான யூஜிசி இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியது கிடையாது என காங்கிரஸ், திரினாமுல் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், இந்த சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட வேண்டும் என எந்த கல்லூரியையும் வற்புறுத்தவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றே நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன” என கூறியுள்ளார்.
    சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆபரேஷனின் போது எல்லை தாண்டி பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டு பின்னர் நாடு திரும்பிய ராணுவ வீரர், தன்னை ராணுவத்தில் இருந்து விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம் அங்கு பயங்கரவாதிகளின் முகாமை அழித்தது. அப்போது, ராணுவ சிப்பாய் சந்து சவான் என்பவர் அங்கு மாயமானர்.

    பாகிஸ்தான் படையினரிடம் சந்து சவான் சிக்கிக் கொண்டதாக பின்னர் தெரியவந்தது. பின்னர், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து அவரை பாகிஸ்தான் விடுவித்தது. இந்தியா திரும்பிய பின்னர் அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடந்தது.

    உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஆயுதங்களுடன் முகாமை விட்டு எல்லை தாண்டி சென்றதாக சந்து மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராணுவ பள்ளிக்கு மாற்றப்பட்டார்.


    மூன்று வாரங்களுக்கு முன்னதாக சந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறையற்று நடந்து கொள்வதால் சந்து சிறிது நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாக ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், “ 20 நாட்களாக இந்த மருத்துவமனையில் இருக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகு (பாகிஸ்தானிடம் பிடிபட்ட நிகழ்வு) என்னை நடத்தும் விதம் மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே, ராணுவத்தில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என சந்து சவான் ராணுவ உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    ×